|
DK Veeramani’s investigation reveals: “Dikshithars took away gold by melting and converting into bars!” | |||
| Published on March 11th, 2009 In Uncategorized | Views 250 | ||||
|
DK Veeramani"s investigation reveals: “Dikshithars took away gold by melting and converting into bars!" சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இதுவரை http://files.periyar.org.in/viduthalai/20090311/news23.html
தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கம் சிதம்பரம், மார்ச் 11- சிதம்பரம் கோவிலில் இதுவரை எந்த கணக்கும் பின்பற்றப்படவில்லை. நடராஜர் கோவிலில் இருந்த தங்கத்தை உருக்கிக் பாளம், பாளமாக தீட்சிதர்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சிதம்பரம் நடராஜன் கோவிலை அரசு எடுத்தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.09 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: பார்ப்பன சத்திய மூர்த்தி காங்கிரசில் இருந்து அதை எதிர்க்கிறார். பார்ப்பனரல்லாதவர் களுக்குத் தலைவராக இருக்கக்கூடிய தந்தை பெரியார், நான் காங் கிரஸ்காரனாக இருந்தாலும் இந்து அறநிலை யத் துறை என்பது பாராட்டப்பட வேண்டிய சட்டம். அதை எந்தக் கட்சி செய்தால் என்ன? இதை எந்த ஆட்சி செய்தாலும் வரவேற்க வேண்டியது தானே என்று தந்தை பெரியார் அவர்கள் துணிந்து எழுதினார்கள். அப்பொழுதுதான் இந்தச் செய்தியை தெளி வாகச் சொன்னார்கள். அது மட்டுமல்ல இன் னொரு செய்தி இதி லேயே தெளிவாகக் குறிப் பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பன நீதிபதி சொன்னார். இவர்கள் சிறுவனுக்கு மான்யம் என்ற பெயரால் 200 ஏக் கர்தான் இவர்களிடம் உள்ளது. அதிலே 100 ஏக்கர் அரசாங்கம், மற்றவை களுக்குப் போய்விட்டது. இன்னொரு 100 ஏக்கர் பல பேருடைய பெயர் களில் 75 ஆண்டுகளாக குத்தகையில் இருக்கிறது. ஆகவே அதிலிருந்து ஒன்றும் பணம் வருவ தில்லை. அதனால் எங் களுக்கே போதவில்லை என்பது நீதிமன்றத்திலே 1951இல் இந்த தீட்சி தர்கள் கொடுத்த வாக்கு மூலம். இது வரலாறு. அதேபோல நண்பர் களே! இப்பொழுது நிர் வாகத்தை சரிசெய்ய வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். கைய கப்படுத்தி, கபளீகரம் செய்து அந்தக் கோவில் சொத்தை தங்களுடைய தனிச் சொத்தாக இவர் கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது எல்லா துறைகளிலும் இருப் பதைப் போல இந்து அறநிலையப் பாதுகாப் புத் துறை அந்தப் பணியை செய்கிறது. இப்பொழுது நீதிபதி அம்மையார் அவர்கள் கொடுத்தத் தீர்ப்பிலே மிக முக்கியமான ஒரு பகுதியை எடுத்து இவர் கள் சுட்டிக்காட்டினார் கள். இன்றைய தீர்ப்பிலே 75வது பாரா. இப்பொழுது எப் படித் தவறுகள் இழைக் கப்படுகின்றன? அற நிலையப் பாதுகாப்புத் துறை ஏன் நிர்வாக அதி காரியைப் போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளா யிற்று. அவசியமென்ன? என்பதை நீதிமன்றத் திலே விலாவாரியாக அடிஷனல் அட்வகேட் ஜெனரல் அரசு சார்பான வழக்கறிஞர் அங்கே வாதாடுகிறார். தெளி வாகச் சொல்லுகிறார். முன்னாலே இருந்த பழைய காலத்து நிகழ்ச்சி. 1982, 1987 இவைகளிலே சுட்டிக்காட்டப்பட்டதையும் அம்மையார் அவர்கள் சொல்லியிருக்கின்றார். தொடர்ச்சியாக ஒரு மணல் கொள்ளை போல நடந்து கொண்டு வரு கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். இதைப்பற்றி விடு தலையில் விரிவாக வெளி வரும். இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. ஏதோ சில வழக்கறிஞர்களை கைக்கூலி போல பிடித்து விட்டார்கள். அவர்கள் தமிழர்களாக இருக்கக் கூடியவர்களாக இருந் தாலும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்று தயவு செய்து எண்ணி ஏமாந்து விடா தீர்கள். மக்கள் மன்றத்திற்கு முன்னாலே எந்த மன்ற மும் சாதாரணம்தான். அதை நன்றாக நினைத் துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்). பல செய்திகள் பல ஏடுகளில் வந்ததே. ஆட் சியை கொள்கையை கடு மையாக விமர்சிக்கின்ற ஏடுகள். கலைஞரை தின மும் தாக்கிக் கொண்டிருக் கின்ற ஏடுகளில் கூட செய்திகள் வந்தன. சிதம்பரம் கோவிலை மக்களுக்குத் திறந்து விட் டார்கள். அந்த கோவி லில் உண்டியல் வைத் தார்கள். இந்த சிதம்பரம் கோவிலுக்குள் மக்கள் எவ்வளவு வேகவேகமாக மகிழ்ச்சியோடு போகிறார் கள் என்று கருத்துகளை கேட்டுக் கேட்டு பத்திரி கையில் போட்டிருந்தார் களே. அதனுடைய விளைவு என்ன? எண்ணிப் பார்க்க வேண்டாமா? எனவே அன்றைக்கே சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். சூடி யீசடியீநச அயவேந யேஉந டிக யஉஉடிரவே கடிச டிககநசபே கடிச வாந வநஅயீடந யனே னடியேவடி உடிடடநஉவநன. சிதம்பரம் கோயிலில் வசூலிக்கப்படுகின்ற நன் கொடை எதற்குமே கணக்கு கிடையாது. எல்லாம் பகவான் கணக்கு தான். நடராஜர் கணக்கு. அந்த காலத்தில் காந்தி கணக்கு என்று வேடிக் கையாகச் சொன்னார் கள். ஆனால் காந்தி கணக்குக் கூட சரியாக இருக்கும். ஆனால் தீட்சி தர்கள் கணக்கு என்பது நடராஜர் கணக்குதான். இதை நான் சொல்ல வில்லை. நீதிமன்றத் தீர்ப்பினுடைய ஒரு பகுதி. அது மட்டுமல்ல, முக்கிய நகைகள், முக்கிய பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன. இன்றைக்குத் தங்கம் விற்கின்ற விலை என்ன? அந்தக் காலத்தில் இருந்த ராஜா, நடராஜர் வெயிலி லேயும், மழையிலேயும் நனையக் கூடாது என்ப தற்காக பொன்னாலே தங்கை ஓட்டை செய்து வேய்ந்து விட்டான். ஏனென்றால் நம் முடைய ராஜாக் அந்த காலத்திலேயே புத்தி சாலி. ராஜாவுடன் பக்கத்தில் இருந்தவனி டம் ராஜா கேட்டான். நான் எப்பொழுதுமே ராஜாவாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நீ இந்த மாதிரி காரி யங்களை செய்ய வேண்டும் என்று சொன்னவுடனே அவருடைய ஆசையை நிறைவேற்ற அரசன் நடராஜன் கோவிலுக்குப் பொன் ஓடு வேய்ந்தான் என்று சொல்லுகின்றார் கள். ஒரு பக்கத்திலே சிதம் பரம் நடராஜர் கோவில் நகைகள் காணாமல் போகிறது. இன்னொரு பக்கத்திலே வேறு நகை கள் இருக்கிறது. இதை ஏதோ பொத்தாம் பொது வில் சொல்லுகிறார்கள் என்று நினைக்காதீர்கள். 1982லேயே இந்த புத்த கத்தில் ரொம்ப விரிவா கவே சொல்லியிருக் கின்றோம். அது மட்டுமல்ல - தங்கப் பாளங்கள் எல்லாம் எங்கேயிருக்கிறது. நடரா ஜரிடம் அல்ல. நடராஜ ருடைய மறு உருவம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்ற தீட்சிதர்களிடம் இருக்கிறது. இதைக் கண்டுபிடித் துக் கேட்டவுடனே, என்ன பதில் சொன்னார் கள் தீட்சிதர்கள். இதெல் லாம் கோவிலுக்கு சம்பந் தமானது அல்ல. இதெல் லாம் எங்களுக்குச் சொந் தமானது என்று அப் பொழுதுதான் வாழ்நாளி லேயே உண்மையைச் சொல்லியிருக்கின்றார்கள். ஏனய்யா - கணக்குக்கே வராமல் இருக்கிறது என்று கேட்டால், அது எங்களுடைய கணக்கு என்று சொல்லி விட்டார் கள். நிறைய கோவில் நகைகளை தீட்சிதர்களே உருக்கி தங்கள் வசம் வைத்துக் கொண்டார் கள். கடவுளையே உருக்கி விட்டான் (கைதட்டல்). பக்தர்கள் உருகுகிறார் கள். நடராஜனை உருக் குகிறான். இன்றைக்கு ஏன் தங்கம் இவ்வளவு விலை விற்கிறது தெரி யுமா? காரணம் இது தான். அந்த அளவுக்கு தங்கத்தை உருக்கும் இவர் கள் வைத்துக் கொண்டார் கள். வெளிநாட்டில் இருக் கிறவன் வேண்டுமானால் தங்கத்தை வாங்கட்டும் என்று ஒரு வேளை நடராஜர் நினைத்தாரோ என்னமோ தெரிய வில்லை. ஏனென்றால் நம்புகிறவர்கள் அவர்கள் தான். நாங்கள் நம்பாத வர்கள். கடவுளை நம்பாத எங்களுக்கெல்லாம் எம ராஜாவைக் காட்டிவிட் டான். நம்புகிறவர்களுக் குத்தான் நடராஜர் என்று சொல்லிவிட்டான். தீட்சிதர்கள் நகை களை உருக்கிப் பாளம், பாளமாக வைத்துவிட் டார்கள் எடுத்துப் போவ தற்கு சுலபமாக. இதைப் பற்றித் தீர்ப்பிலே நீதி யரசர் சுட்டிக்காட்டி யிருக்கின்றார்கள். இங்கே கூட சொன் னார்கள் பாருங்கள். அர சியல் சட்டம் இருக்கிறது. மதச் சுதந்திரம் என்று இப்படியெல்லாம் இவர்கள் சொன்னார்கள் என்று இங்கே சொன் னார்கள். மதச் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. ஹசவஉடந 25. ஹசவஉடந 26 எங் களுக்கு மதச் சுதந்திரம் என்ற பெயரில் சாதக மாக இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். அரசியல் சட்டத்தில் உள்ள 25 பிரிவு, 26 பிரிவு பற்றி எங்களுக்குத் தெரி யாதா? நாங்கள் படிக் காததா? தயவு செய்து அதை மறுபடியும் திரும் பிப் படிக்கும் போது பார்த்தால் தெரியும். அதைத் தொடங்கும் பொழுதே எப்படித் தொடங்கியிருக்கின்றார்கள் என்றால் ளுரதெநஉவ வடி யீரடெஉ டிசனநச முதலில் மதத்தில் தலையிடக் கூடாது என்ற விதியிருக்கிறது. இந்த ஹசவஉடந அரசியல் சட்டத்திலே. பொது மக்கள் மத்தியிலே இருக் கிற அமைதியை ஒட்டியோ அல்லது ஆடிசயடவைல ஒழுக் கத்தை பொறுத்தோ அல்லது ழநயடவா மக்கள் சுகாதாரத்தைப் பொறுத்தோ அதைத் தாண்டி எதுவும் கிடை யாது. எனவே அதற்குள்ளே வரவேண்டும் எல்லாமே. ஆகவே இதற்கெல்லாம் கேடாக இருந்தால் எந்த மதம் எந்தப் பிரச்சினை யாக இருந்தாலும் அந்த விதி பொருந்தாது. அந்த விதிகளை அமல் படுத்த முடியாது என்பது தான் சட்டம். அதற் குள்ளே இரண்டு வகை யாகப் பிரித்திருக் கின்றார்கள். அரசியல் சட்டத்தைக் காட்டித்தான் ஏமாற்ற லாம் என்று பார்த்தார் கள். நீங்கள் அர்ச்சகராக நியமனம் பண்ணினால் யாரை வேண்டுமானா லும் நியமனம் பண்ணு வீர்கள். மதச் சுதந்திரத் தைப் பறிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். இல்லை ஹயீயீடிவேஅநவே டிக ஹசஉயமய ளை ய ளநஉரடயச யஉவ. ழடிற வாந யசஉயமய ளை ளூரயடகைநைன ளை ய சநடபைடிரள யஉவ. மதக்காரியங்களில் தலையிடக் கூடாது. அதற்குத் தான் நாங்கள் இதைப்படி, அதைப்படி என்று சொல்லிக் கொடுக் கின்றோம். இதற்கு முன்பு மணி யாட்டியவர்கள் ஒழுங் காக மந்திரம் சொன்னது கிடையாது. இப்பொழுது அர்ச்சகர் பள்ளியில் படித்து வந்த இவர்கள் தான் அந்த மந்திரத்தை ஒழுங்காகப் படித்திருக் கின்றார்கள் - இந்த 207 பேரும். மற்றவர்களுக்கு சமஸ் கிருதமே ஒழுங்காகத் தெரியாது. வைஷ்ணவ ஆகமம் என்றால் என்ன வென்று தெரியாது. சிவா கமம் என்றால் என்ன வென்றே தெரியாது. ஆக மம் தெரியாது. ஏதோ நடத்திக் கொண்டிருந் தார்கள் அவ்வளவுதான். இதைச் சொல்லும் பொழுது சாதாரண ஒழுங் கீனமல்ல - ரொம்ப மோச மான ஒழுங்கீனம் நடத் திருக்கின்றது. நீதியரசர் அவர்களு டைய தீர்ப்பிலே உயர் நீதிமன்றம் என்ன சுட்டிக் காட்டியிருக்கின்றது என் பதை அருள் கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். இந்தத் தங்கத்தைப் பாளம், பாளமாக உருக் கினார்கள் பாருங்கள் உருக்கி, அதைப் பெருக்கி வைத்துக் கொண்டார் கள். அது கணக்கில் வர வில்லை. நீதிமன்றத்தில் அதைத் தான் கேட்டார்கள். அந்த உருக்கிய தங்கத்தை எங்கே வைத்தார்கள்? நடராஜர் கருவூலம் எதற்குப் பயன் படுகிறது. கறுப்புப்பணம், கள்ளப் பணம் ஆகிய வற்றைப் பாதுகாப்ப தற்குத் தவறாகப் பயன் படுத்துகின்றார்கள் என்பதுதானே அர்த்தம். இந்து அறநிலைய கடலூர் கமிஷனர் இதை கண்டுபிடித்திருக்கிறார். சிதம்பர் ஆர்.டி.ஓ. முன்னாடி வைத்து கணக்கில் வராத தங்கத்தைக் கண்டுபிடித் திருக்கின்றார்கள். (தொடரும்) |
||||
| ||||
|
| ||||
| ||||







Posted on March 11th, 2009
“தொடரும்” என்பதால், நாளயும் பார்ப்போம்!
Posted on March 11th, 2009
EVR first of all quit Congress when the scam about Tilak memorial fund surfaced of which he was alleged to be a trustee.M.K.Gandhi as usual hushed up by observing fast for a day.So EVR never quit Congress for Brahmin domination.It was a bogey raised by him to make an exit.Iam trying to get full details of that.Readers can help me if they have any confirmed information because Iam quoting some old men account of what transpired in those days.
Posted on March 13th, 2009
Today I am not able to get the article of KV as there was some problem!
The moment I click the following,
http://files.periyar.org.in/viduthalai/20090313/thalai.html
http://files.periyar.org.in/viduthalai/20090313/news18.html
I get only the following:
——————–
Not Found
The requested URL /viduthalai/20090313/news18.html was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
————————-
கலைஞர் ஆட்சிக்கு முன்பு சிதம்பரம் நடராஜர்
கோவிலில் தாலி களவு - காசு மூட்டைகள் கொள்ளை
சிதம்பரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு எடுத் தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.09 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: சிதம்பரத்தில் நிர்வா கத்துறையில் பெரிய அதிகாரி யார் என்றால், ஆர்.டி.ஓ. எனவே, அவரை முன்னிலையில் வைத்துக் கொண்டு - இந்து அற நிலையத்துறை துணை ஆணையர் கோயில் கருவூலத்திற்குள் சென்று இதைக் கண்டுபிடித்தார். ஆர்.டி.ஓ. மட்டுமல்ல - கூடயாரை வைத்துக் கொண்டார்கள் - மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் அதிகாரியையும் வைத்துக் கொண்டார்கள்.
மேலும்
——————————-
So let us see, whether we can get full article - part-II
Posted on March 13th, 2009
Anyway, I goy it indirectly now and is posted as follows:
கலைஞர் ஆட்சிக்கு முன்பு சிதம்பரம் நடராஜர்
கோவிலில் தாலி களவு - காசு மூட்டைகள் கொள்ளை
http://files.periyar.org.in/viduthalai/20090312/news18.html
சித ம்பரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு எடுத் தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.09 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: சிதம்பரத்தில் நிர்வா கத்துறையில் பெரிய அதிகாரி யார் என்றால், ஆர்.டி.ஓ. எனவே, அவரை முன்னிலையில் வைத்துக் கொண்டு - இந்து அற நிலையத்துறை துணை ஆணையர் கோயில் கருவூலத்திற்குள் சென்று இதைக் கண்டுபிடித்தார். ஆர்.டி.ஓ. மட்டுமல்ல - கூடயாரை வைத்துக் கொண்டார்கள் - மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் அதிகாரியையும் வைத்துக் கொண்டார்கள்.
எனவே, மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர், ஆர்.டி.ஓ. இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
பழைய நகைகளை உருக்கியிருக்கின்றார்கள். அதில் 860 கிராம் தங்கம் இழப்பு ஏற்பட்டிருக் கிறது. இதை குறிப்பில் எழுதியிருக்கின்றார்கள்.
கோவிலு ்கு காணிக்கை என்று கொடுத்தார்கள் - பாருங்கள். எல்லாவற் றையும் பகவான் பார்த் துக் கொண்டிருக்கிறார். நடராஜர் என்ன பண்ணு வார்?
காலைத் தூக்கி நின்றவர் - நின்று கொண்டே யிருக்கின்றார். நகையை உருக்கியவன் உருக்கிக் கொண்டேயிருக்கின்றான். பெருக்குகிறவன் பெருக் கிக் கொண்டேயிருக் கின்றான்.
இதைப் பார்த்த கலைஞர் சும்மா இல்லை. உத்தரவு போட்டு இதை முடி என்று சொன்னார். இதை செய்ததற்குத்தான் முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரி விப்பதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய் திருக்கின்றோம்.
அதுமட்டுமல்ல, கணக்குக் கொடுங்கள் என்று கேட்டிருக் கின்றார்கள். கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். எவ்வளவு வருமானம் வந் தது? என்பதைப் பார்க்க வேண்டும். இது ரொம்ப தமாஷாக இருக்கிறது. உதாரணம் சொன்னார் கள்.
நான் நீதிபதி அவர்கள் கொடுத்த தீர்ப்பிலிருந்து தான் சொல்கின்றேன். இதில் எதுவும் என்னு டைய சொந்த கற்பனை அல்ல. உயர்நீதிமன்றத் தீர்ப்பினுடைய ஒரு பகுதி யைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதற் காக சொல்கின்றேன்.
தனியே சட்டக் கல்லூரி யிலே வகுப்பெடுப்பதற் குப்பதிலாக, பொதுமக் களுக்கு இப்பொழுது நாங்கள் வகுப்பெடுக் கின்றோம்.
நீங்கள் இந்த விச யத்தை தெரிந்துகொண்டு ஒவ்வொருவரும் பத்து பேரிடம் இதைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொன்னால்தான் உங்களுக்கு மோட்சத்தில் முன்சீட்டு (கைதட்டல்). நடராஜரே ரிசர்வ் பண்ணி விடுவார்.
இல்லையென்றால், எங்களோடு நீங்கள் வரவேண்டியிருக்கும். (சிரிப்பு - கைதட்டல்)
அடிஷனல் அட்வ கேட் ஜெனரல் கோர்ட்டில் சொல்லுகின்றார்.
மயிலாப்பூர் கபாலீ சுவரர் கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.10 கோடி யாகும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்தும் பக்தர்கள் இருக்கிறார் கள். உலகம் பூராவும் ஈழத் தமிழரிலிருந்து ஏமாளித் தமிழர்வரை எல்லோரும் வரக் கூடியவர்கள் இந்த நடராஜன் கோயிலுக்கு.
எந்த இடத்திலும் நடன நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் பொம்மையைத் தூக்கிக் கொண்டுவந்து வைப்பார்கள். டான்ஸ் கற்றுக்கொடுத்தவன் பின்னால்தான் இருப் பான்.
சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயி லுக்கு ஆண்டு வருமா னம் எவ்வளவு என்று சொன்னால், இவர்கள் காட்டியிருக்கின்ற கணக்கு - 2007 இல் வந்த வருமானம், இந்த ஊர்க் காரர்களாகிய நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரையில் இந்தத் தகவல்கள் எல்லாம் தெரி யாது. 37,199 ரூபாய் - ரொம்ப கரெக்டாக கணக்கு வைத்திருக் கின்றார்கள் - இது ஒரு வருடம் பூராவும் வந்த வருமானம்.
அடுத்த கட்டம்தான் சுவையானது. எல்லா டெலிவிஷனிலும் இப் பொழுது காமெடி, சிரிப்பொலி, நகைச்சுவை நேரமெல்லாம் வருகிறது. அந்த நகைச்சுவை நேரத்தை இதிலே அனுபவிக்கலாம் நீங்கள்.
வரவு எவ்வளவு ரூ. 37,199. இவ்வளவு கரெக் டாகக் கணக்குக் கொடுத்தவர்களைப் போய் இந்தப் பாவிகள் பழி சொல்லுகிறார்கள் என்று சொன்னார்கள்.
அதேநேரத்தில், ஒரு ஆண்டில் செலவான தொகை ரூ. 37,000 (கை தட்டல்). இது மட்டும் ரவுண்டாக செலவு செய்திருக்கின்றார்கள். செலவு போக மீதி கையிருப்பு ரூ.199. வரவு ரூ.37,199. செலவு ரூ.37,000. நிகர இருப்பு ரூ.199. சரி யாக கணக்கு வைத்திருக் கின்றார்கள்.
என்னய்யா சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு கோயி லில் மீதி இவ்வளவு தானா?
வெளியே தெரியாத சென்னை கபாலீசுவரர் கோயிலில் ரூபாய் பத்து கோடி. ஆனால், சிதம் பரம் கோயிலில் வெறும் 37 ஆயிரம் என்று சொன் னால் என்ன அர்த்தம்?
இந்தக் கோயிலின் வருமானம் - செலவுக் கணக்கு எதுவும் சரியாக முறையாக இல்லை.
ரொம்பத் தெளிவா கத் தீர்ப்புக் கொடுத்திருக் கின்றார்கள்.
இதை எல்லாம் பார்த் தால் பக்தர்கள்தானே எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உள்ளபடியே பக்தர்கள், நகர மக்கள் தானே பதில் சொல்ல வேண்டும்.
இந்தக் கோயிலை இந்து அறநிலையத்துறை யின்கீழ் எடுத்தது சரியா? தவறா? என்று அர சாங்கம் சொல்ல வேண் டாம்.
இந்தக் குழுவெல்லாம் சேர்ந்து நாங்கள் இரண்டு பெட்டி வைக்கின்றோம். கலைஞர் அரசாங்கம் செய்தது சரி என்று சொல் கிறவர்கள் எல்லாம் ஒரு பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். இதில் ஒன் றும் கள்ள ஓட்டெல் லாம் கிடையாது. இந்தக் கோயிலை எடுத்தது தவறு என்று சொல்கிற வர்களும் ஓட்டு போடட் டும்.
எல்லோரும் பார்க் கிற மாதிரி போலீஸ் பந்தோபஸ்தோடு சுற்றி நாம் பாதுகாப்பு கேட்டு வைக்கலாம். அதற்கு தீட் சிதர்கள் தயாராக இருக் கிறார்களா?
ஏனென்றால், மக்களு டைய விருப்பத்தைத் தான் மக்களாட்சியான கலைஞர் அரசு செய் திருக்கிறது.
இந்த சிதம்பரம் நட ராஜர் கோயிலைப்பற்றி 1980 இல் கொடுத்த தீர்ப்பு என்ன?
குற்றச்சாற்றுகள் என் னென்ன வருகின்றன? அன்றைக்குக்கூட இதே போல பல வகையான குற்றச்சாற்றுகள் வந் திருக்கின்றன. பல வகை யான கோளாறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை இந்த நூலிலே தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.
பழைய நிலையிலிருந்து இரண்டே இரண்டு உதா ரணங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கட மைப்பட்டிருக்கின்றோம்.
இரண்டு மூன்று விச யம் நான் அண்ணா மலைப் பல்கலைக்கழகத் தில் பல வருடங்கள் படித்திருந்தாலும்கூட, சிதம்பரம் கோயிலுக்குள் நாங்கள் போனதே கிடையாது.
ஆனால், அதேநேரத் தில், இந்த ஊர்க்காரர் கள் அந்தக் கோயிலுக் குள் நுழைந்து பார்த் திருப்பீர்கள். உள்ளூர்க்காரர்களுக்குப் புரியும். வெளியூர்க்காரர் களுக்குப் புரியாது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாண்டி நாய கம் அம்பாள். 1982 இல் அம்பாள் கழுத்தில் கிடந்த பவுன் தாலி களவு போய் விட்டது. தாலி கட்டின வர் அதைப்பற்றிக் கவ லைப்படவில்லை.
அதுமட்டுமல்ல, இன் னும் சில விசயங்களைப் பார்ப்போம். பாஸ்கர சேனாதிபதி கொடுத்த நெற்றிப் பச்சை வைரம் ஆகியவை இப்பொழு தும் கோயிலில் இருக் கின்றன. ஆகவே, இவை களவு போய்விடாமல் பாதுகாக்க வேண்டுமா னால், நிர்வாக அமைப்பை முற்றிலும் மாற்றி, தமிழக அரசே பரிபாலனம் செய்யவேண்டுமென்று தீட்சிதர்களிலேயே சில பேர் அறிக்கை விட்டார் கள் - எப்பொழுது 1982 இல். இது பழைய செய்தி.
அதோடு நடராஜருக் குப் பக்கத்தில் பரமானந் தர் கூடம் என்று ஒரு கிணறு இருக்கிறது. பக் தர்கள் யாராவது நாணய மாக உண்டியலிலே பணம் போடவேண்டும் என்று சொல்லுபவர்கள் அந்தக் கிணற்றிலே போடுகின்ற வழக்கம் உண்டு.
அந்தக் காசை, இரண்டு மூன்று மாதம் கழித்து ஏலம் விடுவது வழக்கம்.
அப்படி ஒரு நாள் பொது ஏலம் விடாமல் சில பேர் கிணற்றிலே ஆட்களை மூழ்க வைத்து, ஒரு துணியைப் போட்டு மூட்டைகளாகக் கட்டி வெளியே எடுத்திருக் கின்றார்கள்.
இதைப்பற்றி வெளி யில் சொன்ன ஆர். கிருஷ் ணசாமி தீட்சிதரை தாக் கும் வன்முறை முயற்சி யில் அங்கு இறங்கியிருக் கின்றார்கள்.
இன்றைக்கு அந்த கிருஷ்ணசாமி தீட்சிதர் இருக்கிறாரோ, இல் லையோ எனக்குத் தெரி யாது. இது நடந்த சம்ப வம். ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் நான் இதை சுட்டிக்காட்டிப் பேசி யிருக்கின்றேன்.
இதை சட்டமன்றத் திலே உறுப்பினர்கள் எடுத்துப் பேசியிருக் கின்றார்கள்.
இதுமாதிரி ஒன்று, இரண்டு அல்ல. ஏராள மான அளவுக்குச் செய்தி கள் உள்ளன. அந்த அள வுக்கு நிலைமைகள் வளர்ந் திருக்கின்றன.
எனவேதான் 1888 ஆம் ஆண்டிலிருந்தே இந்த வழக்குகள் நடந்து வந் திருக்கின்றன.
இன்றைக்கு இவை கள் எல்லாம் சாத்தியம் என்று சொன்னால், காலம் காலமாக நமக்குக் கிடைக்காத ஒரு பொற் கால ஆட்சியை கலைஞர் தலைமையில் அமைத் திருக்கின்ற காரணத் தால் தான் 150 வருட மாகக் கனவு கண்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - இன்றைக்கு முடியக்கூடிய நிலை யிலே அதற்கு மதம் முட்டுக்கட்டை போட்டு 25 கி.மீ. தூரத்தில் நிறுத்தி யிருக்கிறது.
காரணம், அரசியல் உள்ளே போயிருக்கிறது. நீதிமன்றம் அதை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், அது நிறை வேறும். அதில் எந்த வொரு சந்தேகமும் இல்லை.
அதேபோலத்தான் 120 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினை. சிதம்பரம் கோயில் பிரச்சினை முடிந்திருக்கிறது.
அதேபோலத்தான கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்ததைப் போல, வடலூர் வள்ள லார் - (சத்திய ஞானசபை) யார் அங்கு இருக்கக் கூடாது என்று நினைத் தாரோ - அந்த இடத் திற்கே பார்ப்பனன் உள்ளே நுழைந்து விட்டான்.
ஆக, இவ்வளவு நாட் களாகப் பிரச்சினையை மூடி மூடி வைத்திருந் தான். இப்பொழுதுதான் அறநிலையப் பாதுகாப் புத் துறையின் கீழ் இந்த அரசு எடுத்து எல் லோருக்கும் தெரியும் படியாக எல்லோரும் பாருங்கள் என்று சொல்லி, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணையைப் பார்க்கத் திறந்துவிட்டிருக்கின்றார்கள்.
ல்லோரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை உருவாக் கியது கலைஞர் அரசு தான் என்று சொல்லும் பொழுது நாம் மிகுந்த பெருமையடைகின்றோம்.
வடலூர் வள்ளலார் மனம் நொந்து - கண் மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண் டும் என்று சொன்னார். அவரையே மண் போட்டு மூடும்படி அந்த அள வுக்கு ஆக்கிவிட்டான்.
எனவேதான், இப் பொழுது நடப்பது மிகப் பெரிய புரட்சி - சாதா ரணப் புரட்சியல்ல.
நந்தன் வந்தார் - சிதம் பரம் நடராஜரை தரி சிக்க. அப்பொழுதுகூட தீ குளிக்கச் சொல்லி யிருக்கின்றான்.
தீ குளிப்பதற்கு முன் னோடியாக இருந்தவன் அவன்தான்.
அவன் தானாக வந் திருக்க முடியாது. வலுக் கட்டாயமாகப் பிடித்து பார்ப்பானே தீயில் தள்ளியிருப்பான். இப் பொழுது மாதிரி உணர்ச் சிப்பூர்வமாக இருந் திருக்க முடியாது.
இந்த சூழ்நிலையிலே நந்தனை நடராஜர் என்ன கட்டிப் பிடித்துக் காப் பாற்றினாரா? இல்லை. அல்லது உள்ளே வரச் சொன்னாரா? இல்லை.
ஆனால், நந்தியே சற்று விலகியிரும் பிள்ளாய்! என்று அவ்வளவுதான் நடராஜர் சொன்னார்.
நடராஜனைப் பார்க்க முடியாமல் இருந்தத் தடை இருக்கிறது பாருங் கள் - அந்தத் தடையை மட்டும்தான் நீக்கினான். ஆனால், அன்றைக்கு நந் தன் பரம்பரை உள்ளே மணியடிக்கத் தடுத்தார் கள்.
நந்தன் பரம்பரை யினரிடமிருந்து பூசை மூலம் பிரசாதம் வாங்கக் கூடிய நிலை இன்றைக்கு வந்துவிட்டது.
தமிழகத்தினுடைய பல கோயில்களிலே ஆதி திராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லக் கூடிய அந்த சரித்திரம் ஒரு சமூகப் புரட்சியாக இன்றைக்கு வந்து விட் டது.
ஈழத்திலே தமிழர்கள் தினம், தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இனப்படு ொலை நடந்துகொண்டிருக்கின்றது என்பதற்காக நாம் எல் லோரும் கதறிக் கொண்டு இருக்கின்றோம் - பதறிக் கொண்டிருக்கின்றோம்.
இதுவரை மத்திய அர சுக்குப் போதிய அழுத் தம் கொடுக்கவில்லை யென்று நமக்கு ஆதங் கங்கள் உண்டு.
அந்த ஆதங்கத்தை அவ்வப்பொழுது சொல் லிக் கொண்டிருக்கின்ற பொழுது இப்பொழுது தெளிவாக ஆகிவிட்டது.
ராஜபக்சே அரசு - இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடியை நாம் எல் லோரும் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம்.
இதுவரை மத்திய அரசு அவ்வளவு வேக மாக சொல்லவில்லையே. போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல் லக்கூடிய அளவிற்கு வரவில்லையே என்று சொல்லி - அழுத்தம் கொடுக்கக் கொடுக்க இன்றைக்கு என்ன நில வரம் என்றால், இன்று மாலை தொலைக்காட் சியில் செய்தி வந்திருக் கிறது.
தூத்துக்குடி வந்த பிரணாப் முகர்ஜி தெளி வாகச் சொல்லியிருக் கின்றார்.
விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று சொல்லிவிட்டார் கள்.
இலங்கை அரசே, நீங்கள் போர் நிறுத்தம் செய்து அவர்களோடு பேசுங்கள் என்று முதல் முறையாக இந்திய அர சினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் சொன் னார் என்று சொன்னால், நாம் கொடுக்கின்ற அழுத்தங்கள் வீணா காது.
நாம் நினைக்கக் கூடி யது நடக்கும். ஈழத்திலே அழிந்து கொண்டிருக் கின்ற தமிழ் இனம் காப்பாற்றப்படும்.
இங்கே கொள்ளை போகின்ற பொருள்கள் எப்படி காப்பாற்றப்படு கின்றனவோ, அதுபோல அழிந்துகொண்டிருக்கின்ற இனம் தடுத்து நிறுத்தப் பட்டு காப்பாற்றவேண் டும் என்று சொன்னால், தமிழர்களே உள்ளூர்ப் பிரச்சினையாக இருந் தாலும், ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந் தாலும் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை, எல்லோரும் ஒருங்கிணைந்து உண் மைக்குப் போராடு வோம். உரிமைக்குப் போராடுவோம் என்று சொல்லி, ஒன்று திரளுங் கள் என்று சொல்லி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் களுக்கு நன்றி கூறி, நீண்ட நேரம் கேட்ட உங்களுக் கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.
- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
Ganguly Leads As KKR Captain
About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ | Sitemap