“No right to criticize religion of others": Manmohan Singh! But how Christians, Mohammedans and Black " Red Parivar criticize Hindus?
|
மற்ற மதத்தை குறைகூற உரிமையில்லை: பிரதமர்
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=7898"cls=row4"ncat=IN |
|
மார்ச் 11,2009,00:00 IST
|
|
|
|
|

புதுடில்லி:மற்ற மதத்தைக் குறைகூறிக் கண்டிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை, என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் குணமடைந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், முதன் முதலாக பொது நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். மிலாது நபி விழாவையொட்டி, முஸ்லிம் பள்ளி மாணவிகள் பிரதமரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், என முழு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற மதத்தைக் கண்டிக்கவோ, இழிவு படுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படாதவரை நாடு முன்னேற்றமடையாது. உருது மொழி வளர்ச்சிக்காக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். உருது மொழி வகுப்பில் படிப்பவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவது மனநிறைவை அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். |
|
This entry was posted
on Wednesday, March 11th, 2009 at and is filed under Uncategorized, News, Philosophy, Politics.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can skip to the end and leave a response. Pinging is currently not allowed.
Posted on March 11th, 2009
பிறகு எப்படி, கிருத்துவர், முகமதியர், கருப்பு மற்றும் சிகப்பு பரிவாரங்கள் எல்லாம் ஹிந்துக்களை குறைகூறுவது மட்டுமல்லாமல், அவதூறு பேசி, அவமதிக்கவும் செய்கிறார்களே?
யார் அவர்களுக்கு அத்தகைய உரிமையைக் கொடுத்தது?
Posted on March 13th, 2009
The attitude of Arulmozhi has been well known, as she used to talk and write in that way. But she refuses to address the issue.
She has only decided to accuse Hindu religion.
When she advises to beat men in villages, politicians etc., it is her own brand of dravidian culture that has produced.
She responds to the events after months.
Nirmala was removed. As pointed out no woman cared.
Unwittingly, she accepts that the TV-channels repeatedly showed the events. But how they came, when even the police did not know!
After sleeping months, she is writing now on the “women’s day”.
It is better for her to sleep like other woman-activists instead writing like this.
——————————–
It was stage-managed, as could be seen from the photos appearing in the web-sites.
மதவெறியும் பெண் உரிமையும் - வழக்கறிஞர் அ.அருள்மொழி
http://files.periyar.org.in/unmaionline/2009/march/01-15_2009/page04.php?0945-56 0_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_0000-1100_01-15_2009
தனக்க ு எந்தத்தொடர்பும் இல்லாத, யாரென்றே தெரியாத முன்பின் பார்த்திராத ஒரு கும்பலால் பேருந்தில் இருந்து அடித்துக் கீழே இறக்கப்படுகிறார் ஓர் இளம்பெண். அவருடன் இரு நண்பர்கள் (ஒருவர் பெண், மற்றவர் வேற்றுமதத்தைச் சேர்ந்த ஆண்) பேருந்தில் சிரித்துப் பேசியபடி பயணம் செய்தார்கள் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை - அவர்களை அடித்து பேருந்தை விட்டு இறக்கியதற்கு. அந்த மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவமானப்படுத்திய மதக்காவலர்கள் அந்தப் பெண்களின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் கேவலப்படுத்தினார்கள். மனமுடைந்து கதறிய தங்கள் மகளுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்ற அவரது பெற்றோர், மறுநாள் காலை அந்தப் பெண் தூக்கில் தொங்கியதைக் கண்டார்கள். அத்துடன் முடிந்திருந்தால் தங்கள் மதத்தின் கவுரவத்தைக் காப்பாற்றிய பெருமையோடு முடிந்து போயிருக்கும் மதக்காவலர்களின் கடமை. ஆனால், மறுநாள் நிகழ்ந்தது அதைவிடக் கொடுமை. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். தங்கள் மகள் 18 வயது நிறைவ-டையாத மைனர் என்றும், அவர் பாலியல் வன்முறைக்கு ஆளானதால் அவமானம் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்ட-தாகவும், அந்தப் பெண்ணின் நண்பரான பேருந்தில் உடன் பயணம் செய்தவர்தான் குற்றவாளி என்றும் அந்தப் புகாரில் எழுதப்-பட்டிருந்தது. அதன்படி முதல்நாள் பேருந்தில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்-பட்டுள்ளார். இனி அவரது வாழ்க்கை என்னவாகுமோ தெரியாது. இப்படி ஓர் இளைஞனின் வாழ்வைச் சிதைத்ததன் மூலம் வெற்றிக்கொடி நாட்டி விட்டார்கள் மதக்காவலர்கள்.
இது தாலிபான்களின் ஆதிக்கத்தில் நடக்கும் ஆப்கானிஸ்தானத்தின் ஒரு காட்சி என்றால் நமக்கு வியப்பில்லை. ஆனால், இந்தக் கொடுமை நிகழ்ந்த இடம் இந்தியா. அதிலும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் வாழும் கருநாடக மாநிலத்தில், இதை நடத்தியவர்கள் பி.ஜே.பி. ஆட்சியின் பாதுகாப்புடன் இந்துத் தீவிரவாதத்தை மக்கள் மீது திணிக்கும் இந்து தாலிபான்கள். பெண்கள் குதிகால் தெரிய உடை அணிந்தால் அந்தக்காலில் சவுக்கடி கொடுப்பேன் என்று மிரட்டுகிற தாலிபான்களுக்கும் நாகரிக உடை அணிந்தால் அதைக் கிழித்தெறிவோம் என்கிற இந்து தீவிரவாதிகளுக்கும் வேறுபாடு இல்லை. மேலும், வட இந்தியாவில் புனிதமான காசி மடத்தில் இந்து விதவைகள் விபச்சாரம் செய்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டதைத் திரைப்படம் எடுக்கச் சென்ற தீபாமேத்தா என்ற இயக்குநரும், அவரது குழுவும் ஓட ஓட விரட்டி அடிக்கப்-பட்டதையும், தன் சொந்தக் கதையை எழுதிய தஸ்லிமா நஸ்ரீன் என்ற முஸ்லிம் பெண் தனது உறவினர்களாகிய ஆண்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று எழுதியதற்காக முஸ்லீம் சமுதாயத்தையே கேவலப்படுத்தி விட்டார் என்று கூறி கூட்டம் பேச வந்த இடத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் உயிரைக் குறிவைத்துத் தாக்கப்பட்டார்.
பிரபலமானவர்கள் நிலை இப்படி என்றால் பெற்றோருக்குத் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து பேசும் இளம் பெண்கள் நிலை என்னவாகும்? கேள்வியே வேண்டியதில்லை. இதோ நடக்கிறது சூடான பகல் காட்சி பக்கத்து மாநிலமான கருநாடகத்தில். மங்களூரில் வெளிநாட்டு மது குடிப்பழக்கம் (Pub) ஒன்றில் ஆண்களும் பெண்களும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது இந்து மதக் காவலர்கள் உள்ளே நுழைந்து அந்தப் பெண்களை அடித்துக் கீழே தள்ளி சட்டையைக் கிழித்து அவமானப்படுத்தி விரட்டி விட்டார்கள். உடன் இருந்த ஆண்களுக்கும் அடி.
இந்தக் காட்சியை பல தொலைக்-காட்சிகளில் திருப்பி திருப்பிக் காட்டினார்கள். அதையே சாக்காக வைத்து பப்புகளில் எப்படி எல்லாம் பெண்கள் உடை அணிந்துகொண்டு வருகிறார்கள் என்றெல்லாம் சுற்றிச் சுற்றிக் காட்டினார்கள். அதைப் பார்த்த பலர் பொது-வாக பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் எல்லை மீறுகிறார்கள் என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் உள்ளூர இந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளலாமா கூடாதா என்ற சந்தேகத்துக்கு ஆளாகிறார்கள். மதக் காவலர்களைப் போலவே மற்றவர்கள். இனப்பண்பாடு, மொழிப் பண்பாடு, மாநிலப் பண்பாடு என்று பலவகைப் பெயர்களில் இந்தத் தாக்குதலை வேறு மாதிரியாக முன் வைக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையைக் கண்டிப்பவர்கள் கூட பெண்களும் நாகரிகத்தை மீறக்கூடாது தான் என்று ஓர் எச்சரிக்கை அறிவிப்புடன்-தான் நீதி, நியாயம் எல்லாம் பேச முடிகிறது. அவள் விரும்பிய உடையை அணிவதால் ஏன் உன் மனம் அலைபாய வேண்டும். நீ ஒழுக்கமாக இரு. மேலாடையே போடாத சமூகப் பெண்கள் உலகில் இல்லையா? திருவிளை-யாடல், கந்தன்கருணை, திருமால்பெருமை, திருவருட்செல்வர் போன்ற படங்களில் நமது பெண் கடவுள்கள் அணிந்து வந்த உடைகளில் ஆபாசம் இல்லையா? பெண்ணை தெய்வ-மாகப் பார், தாயாகப் பார் என்று ஆண்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டு நாகரிகம் எது? எந்த அளவு? என்று ஏன் இன்ச் டேப்புடன் பேசுகிறோம்.
வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப்பணம், வேடிக்கை காட்டுது சின்னப் பணம் என்று நம் கிராமத்து மக்கள் பாடிய பாடலை விட இன்றைய நிலைக்கு வேறு ஒப்பீடே தேவை இல்லை, ஒரே ஒரு மாற்றம் வெள்ளைக்காரன் பணம் இன்று டாலர் பணம் நாடு முழுக்க குழந்தைகள் விளையாட இடமில்லாமல் செய்துவிட்டு அய்ட்டி பார்க் என்ற பெயரில் சிற்றூர்களைக் கூட அமெரிக்-காவின்-அலுவலகக் கிளையாக மாற்றிக் கொண்டிருக்-கிறோம். அந்த நிறுவனங்கள் கொடுக்கும் டாலர் கூலிக்காக நம் இளைஞர்கள் உடலும், மனமும் சீர்கெட்டுப் போகும்படியாக உழைக்கிறார்கள். பெற்றோருக்கும் தங்கள் மகள்/மகன் டெக்சாசில் இருந்து கனடாவிற்குப் போய்விட்டதை தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்குப் போனதைப் போல பேசுவதில் ஏற்பட்டுள்ள பெருமை. இவை எல்லாம் சேர்ந்துதான் பப் கலாச்சாரத்தை உருவாக்கு-கின்றன. தனது நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர்கள் இரவு நேரத்தில் அதாவது அமெரிக்கப் பகல் நேரத்திற்கு ஏற்றபடி வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க நிறுவனம் என்ன செய்ய வேண்டும். அவர்களது வேலை நேரத்தை ஒழுங்கமைக்க வேண்டும். விடுமுறைகளை அளிக்க வேண்டும்.
ஆனால், பன்னாட்டுக் கம்பெனிகள் செய்வதெல்லாம் இளைஞர்களை இரவு விருந்துக்கும், களியாட்டங்களுக்கும் உட்படுத்துவதுதான். பெரும்பாலான ஆண்களும், பெண்களும் இந்தச் சூழ்நிலையில்-தான் குடிப்பழக்கங்களுக்கு அறிமுகமா-கிறார்கள். பிறகு, நண்பர்களை அழைக்-கிறார்கள். அதுவே பொழுதுபோக்காகி விடுகிறது. தங்கள் குடும்பத்துடன் இதே நட்சத்திர ஓட்டல்களில் மாலை நேர விருந்துகளை நடத்தி உண்டு மகிழ்பவர்கள்-தான் பெரும்பாலான தலைவர்கள். இந்த நடவடிக்கைகள் எதையும் கண்டிக்காத மத, பண்பாட்டுக் காவலர்கள், பெண்கள் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்றும் பெண்ணின் உடையில் மட்டுமே தங்கள் பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதாகவும் பேசுவது எதைக் காட்டுகிறது? நாடாளுமன்றத்திலிருந்து, பப்புகள் வரை எங்கள் இடம் அங்கு நாங்கள் எங்களுக்குப் பிடித்த பெண்களோடு மகிழ்ச்சியாக இருப்பதால் எந்தப் பண்பாடும் அழியாது. எங்கள் வீட்டுப் பெண் வேறு ஒருவருடன் அங்கு சென்று விட்டால் மொத்தப் பண்பாடும் குப்புறக் கவிழ்ந்துவிடும் என்ற மிரட்டலை, பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டிய காலம் இது. அவர்கள் சில கேள்விகளைக் கேட்டே ஆக வேண்டும்.
கிராமங்களில் எத்தனையோ மைல்கள் நடந்து இரட்டைக்குடம் சுமந்து வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வரும் பெண்ணின் வீட்டில் இருக்கும் ஆண்களைப் போய் உதையுங்கள்!
சிற்றூர்களில் பெண்களின் இயற்கைக் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் கட்டாத அதற்குத் திட்ட-மிடாத அரசியல்வாதிகளை, அதிகாரிகளை சட்டையைப் பிடித்து உலுக்குங்களேன்!
சின்னப் பெண் குழந்தைகளைப் பாலியல் வக்கிரத்துடன் தொட்டுப் பழகும் உங்கள் வீட்டு ஆண்களின் கைகளை உடைத்து மேசையில் வைக்கலாமே!
பெண்களைக் கடவுள் வடிவத்தில் காட்டும்-போது வெறும் கச்சையுடன் வரும் ஓவியங்கள் கோயில் சிலைகள் அனைத்திற்கும் ஒரு மாராப்பு போட்டு மூடுங்களேன்!
இந்தக் கேள்விகளை நம் பெண்கள் முன்வந்து, உரத்துக் கேட்க வேண்டும். எந்த நம்பிக்கையின் பேரிலும் பெண்கள் மீது ஒடுக்குமுறை நிகழ்த்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று முழங்க வேண்டும். வரதட்சணை எதிர்ப்புக்கு மாட்டோம் என்று முழங்க வேண்டும். வரதட்சணை எதிர்ப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மதவெறி எதிர்ப்புக்கும் கொடுக்க, பெண்கள் இயக்கங்-கள் முன்வர வேண்டும். வீட்டில் இருக்கும் நம் குடும்பத் தலைவிகள் சீரியலில் இருந்து சிந்தனைக்கு மாற வேண்டும். அதற்கான ஒரு முயற்சியையேனும் தொடங்குவோம், சர்வதேச உழைக்கும் மகளிர் நாளில்.
Posted on March 16th, 2009
The DK mouth-piece gives this news-item without exaplaning what she spoke and how the trouble started.
Her way of writing as noted above has been that of rabble-rouser.
Moreover, after sleeping she has come out.
—————————————& #8212;–
வழக்கறிஞர் அருள்மொழி பேசிய பொதுக்கூட்டத்தில்
இந்து முன்னணிக் காலிகள் வன்முறை
http://files.periyar.org.in/viduthalai/20090315/news24.html
http://files.periyar.org.in/viduthalai/20090315/Page06.html
வால ாஜா, மார்ச் 15- திராவிடர் கழகப் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணிக் காலிகள் கலாட்டா செய்தனர் - இருவரை காவல்துறை கைது செய்தது.
திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் வாலாஜாவில் நேற்று மாலை (14.3.2009) நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள் மொழி உரையாற்றினார். ஏராளமான அளவில் பொது மக்கள் திரண்டு உரை யைக் கேட்டனர். வழக்கறிஞர் அருள்மொழி உரையை முடிக்கப் போகும் நேரத்தில் இந்து முன்னணிக் காலிகள் சில பேர் உருட்டுக்கட்டையுடன் மேடையை நோக்கிஓடி வந்தனர். தடுத்த தோழர் களைத் தாக்கினர். கேவலமான வார்த்தை களால் திட்டி அருள்மொழியைத் தாக்க முயன்றபோது தோழர்கள் தடுத்தனர். அதனால் தோழர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் ஓடி வந்து காலிகளை கையும் களவுமாகப் பிடித் தனர். பொது மக்கள் திரண்டு எழுந்தவுடன் சில காலிகள் ஓடித் தப்பினர். அருள்மொழி யைத் தொடர்ந்து பேசுமாறு பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுப் பிரச்சார செயலாளர் அருள்மொழி மேலும் 15 மணித்துளிகள் உரையாற்றி னார். 15 நாட்களுக்கு முன் இதே இடத்தில் இந்து முன்னணி பொதுக்கூட்டம் போட்டு, திராவிடர் கழகத்தையும் அதன் தலை வரையும் வாய்க்கு வந்தவாறு ஏசினார் களாம். சரக்கு இல்லாதவர்கள், வேறு சரக்குகளை போட்டுக் கொண்டுக் கத்து வது இயல்புதானே.
Ganguly Leads As KKR Captain
About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ | Sitemap