Singam movie stills
Register/ Login   
Submit Mobile RSS Java Script Feed  
Home Videos Spotlight Movies Gallery Sports





Profile :

I am a freelancer and researcher interested in the ancient Indian history and its impact on the current events. The Indians have been subjected to coolie-mentality that works even today. Though, they earn, they are controlled by the factors of ego, selfishness and other facts and thus they compromise, dilute or even sacrifice their religion, culture, heritage, tradition and civilization. The racial interpretation of Indian history has played havoc and I am trying to analyse it critically.

Content Created :

Blogs Posted :321
Articles Posted:1
Videos Uploaded :0
Albums Uploaded :0

Member Since: 21-10-2007
Palaniappan has no friends.
Previous
    
Karunanidhi and Friday 13th!
Published on March 19th, 2009 In Uncategorized |  Views 244

Karunanidhi and Friday 13th!

Karunanidhi has made fun about the Friday 13th

13 ஆம் எண் மூட நம்பிக்கையைச் சார்ந்ததா?

(கலைஞர் கடிதம்)

http://files.periyar.org.in/viduthalai/20090318/news07.html

http://files.periyar.org.in/viduthalai/20090318/thalai.htmlசென்னை, மார்ச் 18- 13 ஆம் எண் என்பது மூடநம்பிக்கையாளர்கள் பார்வையில் கெட்ட நாள் என்பது குறித்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதிய கடிதம் வருமாறு:

மே 13 ஆம் தேதிக்கும் நமக்கும் ஒரு பொருத்தம் உண்டு. 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்து மே 13 ஆம் தேதிதான் ஆளுநர் மாளிகையில் நான் முதல மைச்சராகப் பதவியேற்றுக் கொண் டேன். 2004ஆம் ஆண்டு மே திங் களில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை எண் ணப்பட்டு நம்முடைய கூட்டணி நாற்பது இடங்களிலும் அமோக வெற்றி பெற்றது 13ஆம் தேதியன்று தான். 2006 ஆம் ஆண்டும் சட்ட மன்றத் தேர்தல் முடிந்து மே 13 ஆம் தேதிதான் நான் அய்ந்தாவது முறை யாக முதலமைச்சராகப் பொறுப் பேற்றுக் கொண்டேன். ஏன் தற் போது உடல்நலம் பெற்று 45 நாட் களுக்குப் பிறகு அரசின் தலைமைச் செயலகம் சென்றதுகூட 13 ஆம் தேதி யன்றுதான். பெரியார், அண்ணா வழி பகுத்தறிவுவாதியாகிய எனக்கு நல்ல நாள், கெட்ட நாள் என்றெல் லாம் எழுதுவதிலும், பேசுவதிலும், நம்புவதிலும் ஆர்வமும் இல்லை; அக்கறையும் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு 13 ஆம் தேதி என்பது பிடிக்காத ஒன்று. தீயநாள் என்பதற்காக அந்நாளில் எச்செயல் களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதே 13 ஆம் தேதிதான் எப்படியோ நமக்கு பொருந்தி வந்து விட்டது. இதில் சாஸ்திர சம்பிர தாயம் ஒன்றுமில்லை.

நம்முடைய பெரியோர்கள் திரு மணம் போன்ற நல்ல காரியங்களுக்கு நாள் குறிக்கும்போது, செவ்வாய்க் கிழமை என்று வந்தால் - செவ் வாயோ, வெறுவாயோ என்று கூறி, அந்த நாளை ஒதுக்கி விடுவார்கள். பெண்ணின் அழகுகளில் செவ்வா யும் ஒன்று எனக் கவிதை பாடுகி றோம். ஆனால், நல்ல நாள் வரிசை யிலே அந்தச் செவ்வாயை வைக் காமல் அதை ஒதுக்கி விடுகிறோமே, அது சரிதானா என்று ஒரு மண விழாவிலே நான் பேசியது நினை வுக்கு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இன் னொரு திருமண விழாவிற்கு மாலை நேரத்தில் நாள் பார்த்திருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் திருமணம் என்று அந்த மணமகன் அழைப்பித ழில் அச்சிட்டிருந்தார். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சரியாக 6.15 மணிக்குத்தான் அந்தத் திருமண விழாவிற்குச் சென் றேன். அப்போது நான் ராகுகாலத் திற்குள் வரவில்லை என்று கோபித் துக் கொண்டு தீவிர சுயமரியாதைக் காரரான மணமகன் மணப்பந்தலை விட்டு வெளியே போய் இன்னொரு வீட்டுத் திண்ணையில் அழுது கொண்டிருந்தார். என்ன காரணம் என்று கேட்டபோது நான் 4.30 மணி முதல் 6 மணி வரை கொழுத்த ராகு காலத்தில் நேரம் பார்த்து மணவிழா வைத்திருந்தேன். ஆனால் அந்த எண் ணம் எனக்கு ஈடேறாமல் போய் விட் டது. நீங்கள் தாமதமாக வந்தது தான் அதற்குக் காரணம் என்று கூறினார்.

நான் அவரை சமாதானப்படுத்தி, எல்லாவற்றிலும் தீவிரம் கூடாது, எது எதற்கு கொள்கையில் உறுதி வேண்டுமோ அதில் உறுதியாக இருந்தால் போதுமானது. ஞாயிற் றுக்கிழமை 4.30 முதல் ராகுகாலம் என்று நீ நம்புகிறாயா? நம்புவதால் தானே அந்தக் காலக் கட்டத்திற்குள் திருமணத்தை வைத்திருக்கிறாய்! இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான் என்று அறிவுரை கூறினேன். அதற்குப் பிறகுதான் மணமகன் சமாதானம் அடைந்து மணப்பந்தலுக்கே வந் தார்.

தேதி பொருத்தம் பற்றி சில சேதி களை எழுதுவதற்கும் இந்த 13 ஆம் தேதி இப்போது பயன்பட்டிருக் கிறது அல்லவா?

  Share      Print


One Response to “Karunanidhi and Friday 13th!”
    1. MNachiappan Says:
    Posted on June 4th, 2009

    I do not know what is happening here.

    why my blogs posted since March 2009 (March to May) are missing?

      Share    Print



    You must be logged in to post comments


Ganguly Leads As KKR Captain




Recent Posts






About | Content providers | Support | Beta feedback | Report abuse | Contact us | Careers | FAQ | Sitemap